இன்றைய மருத்துவ சிந்தனை: கசகசா

தூக்கமின்மை பிரச்சனை தீர
இன்றைய மருத்துவ சிந்தனை: கசகசா


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


கசகசா:

  • தூக்கமின்மை பிரச்சனை தீர கசகசாவை (10 கிராம்) அளவு எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்து இரவு படுக்கபோகும் முன் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
  • உடல் வலுப்பெற கசகசா , முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பு இவை அனைத்தையும் தலா 100 கிராம் அளவு  எடுத்து அரைத்துக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து  சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
  • முகம் அழகு பெற , முகப் பரு மறைய கசகசா , முந்திரிப்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.  முகம் அழகு பெறும்.
  • மூட்டு வலி நீங்க கசகசா , துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால் , மூட்டுவலி உடனே குணமாகும்.
  • ரத்த உற்பத்தி அதிகரிக்க கசகசா , வாழைப்பூ , மிளகு, மஞ்சள் இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்த உற்பத்தி  அதிகரிக்கும்.
  • இடுப்பு வலி நீங்க கசகசா , ஜவ்வரிசி , பார்லி இவை மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து , பச்சரிசியுடன் (100 கிராம்) அளவு  சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் இடுப்பு வலி குணமாகும்.
  • வயிற்றுப் புண் குணமாக கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் , வயிற்றுப்புண் குணமாகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com