நீங்கள் செல்வச் செழிப்போடு உடல் நலமுடன் வாழ்வதற்கு இதோ ஒரு எளிய வழி!

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவில் காரம் குறைந்தால் கூட சாப்பிட்டுவிடுவோம்
நீங்கள் செல்வச் செழிப்போடு உடல் நலமுடன் வாழ்வதற்கு இதோ ஒரு எளிய வழி!

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவில் காரம் குறைந்தால் கூட சாப்பிட்டுவிடுவோம் ஆனால் உப்பு குறைந்தால்? ஒருவரை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்றால் சாப்பாட்டில் உப்பு போட்டுத்தான் சாப்பிடறயா என்று சூடு சொரணைக்கு உப்பை சம்மந்தப்படுத்தி திட்டுவோம். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிறது ஒரு முதுமொழி. இவ்வாறு தாயின் வயிற்றில் குழந்தை உருவானது முதல் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை உப்பும் நீரும் மனிதருக்கு இன்றியமையாத ஒன்று. அத்தகைய உப்பை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

நமது உணவில் சேர்க்கும் உப்பு சாதாரண உப்பாகும். இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைட். உப்பு என்பதில் சோடியம் என்பதே முக்கியமானதாகும். காரணம் சோடியம் ஒவ்வொரு மனித செல்லின் ஆரோக்கியத்திற்குத் தேவையானது. இது ஒவ்வொரு செல்லுக்கிடையே உள்ள நீர்மத்தை உட்புகவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக செல்லின் வெளிப்புறப் பகுதி செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். 

செல்லின் உட்புற செயல்பாட்டிற்கு பொட்டஷியம் காரணமாக இருக்கிறது. சோடியமும் பொட்டாஷியமும் தேவையான அளவில் ஒவ்வொரு செல்லிலும் மாறாமல் இருந்தால் மட்டுமே ஒவ்வொரு செல்லும் தன் வேலையைச் சரியாக செய்து, சத்துக்களை உருவாக்கவும் கழிவுகளை வெளியேற்றவும் முடிகிறது. 

சோடியமும் பொட்டாஷிமும் குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ செல்கள் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்.

உடலில் உள்ள ரத்தத்திற்கும், ரத்தத்திற்கு தேவையான வெள்ளை அணுக்களை எடுத்துவரும் திரவத்திற்கும், இரைப்பையில் அமிலம் சுரப்பதற்கும், புரத உணவு செரிப்பதற்கும், தசைகள் சரியாக சுருங்கவும், நரம்புகள் செயல்படவும் உடலில் உள்ள திரவ நிலை, அமிலத்தன்மை போன்றவைகளை நிலையாக வைத்திருக்கவும் சோடியம் மிக முக்கியத் தேவையாகும்.

உடல் எளிதாக எடுத்துக் கொள்கிற நல்ல சோடியமே அதர்குத் தேவை. அது இயற்கையில் கிடைக்கும் உப்பில் உள்ளதால் உப்பை நமது முன்னோர்கள் பிரதானப்படுத்தியிருக்கிறார்கள். விருந்து பரிமாறும்போது அந்த இலையில் உப்பை ஒரு ஓரமாக வைக்கும் பழக்கம் இதனால்தான் ஏற்பட்டது.

உப்பைப் பற்றி விழிப்புணர்வை உண்டாக்க உலக அளவில் பல அமைப்புகள் செயல்படுகின்றன. குறிப்பாக  உப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக நடவடிக்கை (World Action on salt and health) எனும் அமைப்பு 2005-லிருந்து பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உப்பை நாம் எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும். நமது வீடுகளில் மட்டுமல்ல, வெளியில் உள்ள உணவகங்கள் மற்றும் முன்பே தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களில் எவ்வளவுச் சோடியம் இருக்க வேண்டும், போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த அமைப்பு தலையிடுகிறது. 

உணவுப் பொருட்களில் மட்டுமல்லாது உப்பை வீட்டுப் பராமரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள்.

கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.


 
ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். இது வீட்டில்  இருந்து வறுமையை விலக செய்யுமாம். எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்கவும்.
 
உள்ளங்கை அளவு உப்பை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை குளியலறையின் ஒரு மூலையில் வைத்து விடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளைக் குறைந்து, பணப் பிரச்னைகளை சீராக்கும்.

சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்க விடவும். இது  வீட்டுக்குள் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடிக்கும்.
 

உணவு மேஜையில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வ செழிப்பினை அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் குறையவே குறையாது. 

கால் வலி ஏற்பட்டால் சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து காலை பத்து நிமிடம் ஊற வைத்தால் கால் வலி குணமாகும். தினமும் குளிக்கும் போது வாளியில் ஒரு கைப்பிடி உப்பும் சிறிதளவு எலுமிச்சை சாறும் சேர்த்தால் புத்துணர்வாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com