இன்றைய மருத்துவ சிந்தனை: அருகம் புல்

நெஞ்சுவலி குணமாக
இன்றைய மருத்துவ சிந்தனை: அருகம் புல்


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


அருகம் புல்:

  • வெள்ளைப்படுதல் குணமாக அருகம் புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர அருகம் புல் வேர் , சிறியா நங்கை வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
  • அருகம் புல் வேரைக் காயவைத்து அரைத்து 100 கிராம் பொடி செய்து அதனுடன்  நல்லெண்ணெய் (500 மில்லி) கலந்து சூடுபடுத்தி , உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அனைத்தும்  குணமாகும்.
  • நெஞ்சுவலி குணமாக அருகம் புல் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து  தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு  கஷாயம் வைத்து குடித்து வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.
  • வயிற்றுப் புண் குணமாக அருகம் புல்லை அரைத்து சாறு எடுத்து தினமும் காலை 50 மில்லி அளவுக்கு வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
  • பல்வலி குணமாக  அருகம் புல் , தூதுவளை வேர் இவை இரண்டையும் கசக்கிச் சாறு எடுத்து ஒரு துளி வீதம் இரண்டு காதுகளில் விட்டால் பல் வலி குணமாகும்.
  • தலைவலி மறைய அருகம் புல் , ஆல மர இலை  இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டு வந்தால்  தலைவலி உடனே குணமாகும்.
  • ஆஸ்துமா , சைனஸ் , சளி நீங்க அருகம்  புல்லை (ஒரு கைப்பிடி) இடித்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா , சளி ,சைனஸ் , நீரிழிவு போன்றவை குணமாகும்.
  • மாதவிலக்கு பிரச்சனை தீர அருகம் புல்லை அரைத்து சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  •  

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com