இன்றைய மருத்துவ சிந்தனை: மணலிக் கீரை

சைனஸ் குணமாக மணலிக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும்  2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: மணலிக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • நன்றாகத் தூக்கம் வர மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு நேரத்தில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
  • சைனஸ் குணமாக மணலிக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும்  2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
  • வறட்டு இருமல் குணமாக மணலிக் கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் உலர்ந்த திராட்சை(5)  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு  வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
  • ரத்த அழுத்தம் சீராக மணலிக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
  • மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் நிற்க மணலிக் கீரையுடன் , மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் குடித்து வந்தால்  மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குணமாகும்.
  • மூட்டு வலி , வாத வலி அனைத்தும் தீர மணலிக் கீரை(சிறிதளவு) எடுத்து அதனுடன்  மிளகு , பூண்டு ,மஞ்சள் , ஓமம்  ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் , வாத வலிகள் போன்றவை குணமாகும்.
  • மன அழுத்தம் , மனக்கோளாறு நீங்க மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை , மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல் , மன அழுத்தம் , மனநலக் கோளாறுகள் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com