விடுப்பு எடுத்த பெண் ஊழியரின் மின்னஞ்சலுக்கு தலைமை நிர்வாக அதிகாரியின் பதில் என்ன?

இந்த உலகம் எப்போதுமே கடுமையான ஓரிடமாக இருக்க வேண்டுமா என்ன? சில சமயம்
விடுப்பு எடுத்த பெண் ஊழியரின் மின்னஞ்சலுக்கு தலைமை நிர்வாக அதிகாரியின் பதில் என்ன?

இந்த உலகம் எப்போதுமே கடுமையான ஓரிடமாக இருக்க வேண்டுமா என்ன? சில சமயம் இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்படும் போது அடடே என்று நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். அத்தகைய ஒரு விஷயம் தான் இது.

மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த மேட்லின் பார்கர் என்பவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வெப் டெவலப்பராக பணி புரிந்து வருகிறார். சமீபத்தில் மனது சரியில்லை என விடுப்பில் சென்ற அவர், தனது சக பணியாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் தனக்கு  மனச் சோர்வினால்,  இரண்டு நாட்கள் பணி விடுப்பில் இருப்பதாகவும், விரைவில் மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். எதிர்பாராதவிதமாக, அந்த மின்னஞ்சலுக்கான பதிலை தலைமை நிர்வாக அதிகாரியே மேட்லினுக்கு அனுப்பியிருந்தார். அந்த மெயிலைப் படித்த மேட்லின் நெகிழ்ந்துவிட்டார். 

மேட்லின் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

'மனச் சோர்வு காரணமாக லீவில் இருந்த சமயத்தில், டீம் நண்பர்களுக்கு அனுப்பிய மெயிலுக்கு என்னுடைய தலைமை நிர்வாக அதிகாரி ஆதரவாக பதில் சொல்லியதுடன், பணி விடுப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்’

இந்தப் பதிவு இணையத்தில் உடனே பரவத் தொடங்கி மேட்லினுக்கும் அவரது தலைமை நிர்வாக அதிகாரிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. 

மேட்லின் பகிர்ந்திருந்த டிவீட்டுகளுக்கு குவிந்த வரவேற்பைப் படித்த அவருடைய தலைமை நிர்வாக அதிகாரி பென் காங்லிடன் மற்றொரு பதிவை எழுதினார். அதன் தலைப்பு - இந்த 2017-லும் கூட மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் இன்னும் பணி இடங்களில் விவாதிகப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

இது 2017, இன்னும் கூட பணி இடங்களில் மன நலம் குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை என்பதை என்னால் நம்ப
முடியவில்லை. இத்தனைக்கும் ஆறில் ஒரு அமெரிக்கருக்கு மன அழுத்தப் பிரச்னை உள்ளது.

இது 2017,  இன்னும் என்னால் முழுவதும் நம்ப முடியவில்லை. பணி செய்பவர்கள் விடுப்பில் செல்லும் போது அவருக்கு பணி ஊதியம் தர வேண்டுமா என்பது இன்னும் சர்ச்சைக்குள் தான் உள்ளது. 37 சதவிகித முழு நேரப் பணியாளர்கள் மட்டும்தான் சிக் லீவுக்கான சம்பளத்தைப் பெறுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது 2017. நாம் பொருளாதாரத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருக்கிறோம். நம்முடைய வேலைகள் நம் மனதையும் உடலையும் சக்கையாக பிழிந்துவிடக் கூடியதாக இருக்கிறது. ஒரு தடகள வீரர் காயமடைந்தால், அவர்கள் சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து ஓய்வு எடுத்த பின் சரியாகிவிடுவார்கள். ஆனால் மூளையால் செய்யக் கூடிய வேலைகள் அப்படியல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com