அச்ச நோய்களை அறிந்து கொள்ள ஓர் இணையதளம்!

பயம் தேவையற்றது என்று பொதுவாகச் சொன்னாலும், எல்லாருக்கும் அவ்வப்போது ஏதாவதொரு பயம் வந்து செல்வதுண்டு.
அச்ச நோய்களை அறிந்து கொள்ள ஓர் இணையதளம்!

பயம் தேவையற்றது என்று பொதுவாகச் சொன்னாலும், எல்லாருக்கும் அவ்வப்போது ஏதாவதொரு பயம் வந்து செல்வதுண்டு. சிலருக்குச் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பயம் வருகிறது. இந்தப் பயத்தால் அவர்கள் அடையும் துன்பம் அதிகமானது. சிலருக்குக் கரப்பான் பூச்சியைக் கண்டால் பயம், சிலருக்குத் தண்ணீரைக் கண்டால் பயம், சிலருக்குப் பூனையைக் கண்டால் பயம், சிலருக்கு இரத்தத்தைக் கண்டால் பயம், சிலருக்குப் பயணம் செய்ய பயம், சிலருக்குப் படிப்பை நினைத்தால் பயம், சிலருக்கு உயரமான இடத்தில் நின்று கீழே பார்த்தால் பயம்... என்று ஏதாவதொரு பொருளைப் பார்த்தோ அல்லது செயலை நினைத்தோ  பயம் கொண்டு துன்பப்படுவதை அச்ச நோய் (Phobia) என்று சொல்கின்றனர்.

குடும்பத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகள், மனதிற்குள் ஏற்படுத்தும் குழப்பமான எண்ணங்கள் போன்றவற்றாலும், வளரும் பருவத்தில் மனதில் ஆழமாகப் பதிந்த அல்லது பாதித்தவைகளால் ஏற்படுத்தும் விளைவுகளாலும் இந்த அச்ச நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய அச்ச நோய்களைப் பட்டியலிட்டு ஓர் இணையதளம் செயல்பட்டு வருகிறது. 

இந்த இணையதளத்தில் அகர வரிசையிலான அறிவியல் - அச்ச நோய் (Alphabetized Scientific  Phobia), அகவரிசைப்படுத்தப்பட்ட அச்ச நோய்  அறிவியல் (Indexed Phobia  Scientific) எனும் இரு வகையான பட்டியல்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

அகர வரிசையிலான அறிவியல்  அச்ச நோய் எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசையில் பல அச்ச நோய்களின் அறிவியல் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்திலான அப்பெயர்கள் தொடங்கும் ஆங்கில எழுத்தின் வழியாக வரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அச்ச நோய்க்கும் அடிப்படையான காரணங்கள் குறித்த சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த இணையதளம் அச்ச நோய் குறித்த முழுமையான செய்திகளைக் கொண்டிருக்காவிட்டாலும், எத்தனை விதமான அச்ச நோய்கள் இருக்கின்றன? அவற்றுக்கான அடிப்படைக்காரணங்கள் எவை? என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவுவதாக இருக்கிறது. இந்த இணையதளத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் http:phobialist.com  எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம். 
- மு. சுப்பிரமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com