இதற்கெல்லாம் கூட ஆப் இருக்கா? 

சமீப காலத்தை ஆப்களின் காலம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நம்மை தினமும்
இதற்கெல்லாம் கூட ஆப் இருக்கா? 

சமீப காலத்தை ஆப்களின் காலம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நம்மை தினமும் காலையில் எழுப்பி விட, ஒரு வட்ட வடிவ டேபிள் க்ளாக் இருக்கும். அதில் பெரிய முள் சிறிய முள் இரண்டையும் ஒருவழியாக திருகி, அலாரம் வைத்து, அது ஊரையே கூட்டும் அளவுக்கு பெரும் சத்தத்தில் அலறி அடிக்க, அதை எப்படியோ தட்டி, ஒருவழியாக கண் விழிப்போம். கால மாற்றத்தின் விளைவாக இப்போது துயில் எழ மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்ய, சரியான அளவு தண்ணீர் குடிக்க, மாதவிலக்கு தினங்களை ட்ராக் செய்ய, உடற்பயிற்சி செய்ய, கார் புக் பண்ண, இன்னும் இன்னும் என எதற்கெடுத்தாலும் ஆப், ஆப் என ஆப்களால் சூழ்ந்த உலகத்தில் நவீன சொகுசு வாழ்க்கையை வாழ்கிறோம்.

ஆண்டவா இதையெல்லாம் கேட்க நீ எங்கே தான் இருக்கிறாய் என்று தேடிப் பார்க்க நினைத்தால்,  ஒரு ஆப் நம் போனிலிருந்து இங்கே தான் உள்ளேன் என்று பதில் சொல்கிறது. ஆம் கோவிந்தா என்று ஒரு ஆப் உள்ளது. சாட்சாத் ஏழுமலையானை கண்டு அடைய நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். அப்பப்பா எத்தனை எத்தனை ஆப்கள் என்று வியந்து போகிறீர்களா, அல்லது டெக்னாலஜி உண்மையில் வரமா சாபமா என்று ஆராய்ச்சியில் இறங்கப் போகிறீர்களா? எது வேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன் இந்த மாய எதார்த்த ஆப்களின் உலகத்தில் சமீபத்தில் வந்து இறங்கியுள்ள ஒரு விசித்திரமான ஆப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

இ-சைக்ளினிக் டாட் காம் (ePsyClinic.com) என்ற நிறுவனத்தினர் தான் இந்த புதிய ஆப் வெளியிட்டுள்ளார்கள். இந்த ஆப் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால் ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு மன அமைதியுடன் திகழலாம் என்று உறுதி கூறுகிறது ஆப்பைத் தயாரித்த டெக்னிகல் டீம். 

இந்த ஆப்பின் தீம் என்னவெனில் ‘ஐ வில்’ அதாவது ‘என்னால் முடியும்’ என்பதே. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்தெடுப்பதே இந்த ஆப்பின் முக்கிய பணி. சட்டென்று உணர்ச்சி வசப்படுதல், கோபம் வந்து உச்ச குரலில் கத்துதல், உயர் ரத்த அழுத்த பாதிப்புக்களுக்குள் சிக்குதல் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட இந்த ஆப் மிகவும் பயன்படும். இவைத் தவிர இந்த ஆப் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

'எங்களுடைய பிரதான நோக்கம், பயன்பாட்டாளர்கள் தங்கள் மனம் மற்றும் உணர்வு ரீதியிலான பிரச்னை, ஸ்ட்ரெஸ் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் தங்கு தடையற்ற மனப்பாங்குடனும் இருக்க வேண்டும். அவர்களைச் சுற்றி தெரிந்தோ தெரியாமலோ உருவாகியிருக்கும் சமூக வலைகளிலிருந்து விடுபட்டு மன மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆப்பை கவனத்துடன் உருவாக்கியிருக்கிறோம்’ என்றார் இ-சைக்ளினிக் டாட் காமின் நிறுவனர் ஷிப்ரா தவார்.
 
இந்த ஆப்பை ஆண்ட்ராய்ட் வசதி உள்ள செல்ஃபோன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com