
ஹன்ஷிகாவின் டயட் டிப்ஸ்
Published on : 09th May 2017 10:34 AM | அ+அ அ- |

தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய புதிதில் ஹன்ஷிகா உடல் எடை பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. அதன் பின் உடல் மெலிந்து சூப்பர் ஃபிட்டாகி செம ஸ்லிம்மாகி விட்டார். அது எப்படி சாத்தியமானது என்று அவரிடம் கேட்டபோது, 'உடல் எடை குறைப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆரோக்கியம் குறையாமல் அதே சமயம் ஸ்லிம்மாகவும் இருக்க உணவில் ஆரம்பித்து நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. படிப்படியாக உடல் எடையைக் குறைத்த பின் அதை மெயின்டெய்ன் செய்வதும் முக்கியம்’ என்றார்.
தனது ஸ்லிம் சீக்ரெட்டைப் பற்றி கூறுகையில், 'நம் உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைக்கலாம்' என்றார்.
தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்வது மனசையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. அப்புறம் நேரத்துக்கு சரியான டயட் சாப்பிடறேன். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தான் சாப்பிடுவேன். கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் ஆப்பிளை விரும்பி சாப்பிடுவேன். அது உடலுக்குத் தேவையான சத்துக்களை தந்துடும். மதியம் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்துடுவேன், பெரும்பாலும் சப்பாத்தி அல்லது கோதுமை பரோட்டா, தால், சாலட் ஒரு கப் தயிர் சாப்பிடுவேன். கூல் ட்ரிங்க்ஸ் தவிர்த்திடுவேன். பழரசங்கள் பிடிக்கும். லேட் நைட் ஷூட்டிங் இருந்தாலும் 8 மணிக்குல்ல சாப்பிட்டு முடிச்சிடுவேன். நைட் பெரும்பாலும் லைட்டான சாப்பாடுதான். என்னுடைய எடை தற்போது 62 கிலோ இது என்னுடைய உயரமான 5.5 அடிக்கு சரியான எடை. இதை சரியாக மெயின்டெயின் பண்றேன்.
உடற்பயிற்சி நேரம் ஹன்சிகா உடல் எடையை குறைக்க முயலும் போது, தினமும் கார்டியோ மற்றும் எடை தூக்கும் உடற்பயிற்சி என இரண்டையுமே கலந்து மேற்கொள்வார். அதற்காக தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் தவறாமல் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பாராம். உடற்பயிசிக்கு பின் ஹன்சிகா உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் மில்க் ஷேக் குடிப்பாராம்.
உணவுப் பழக்கங்கள் மூலமே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை என்று பரிந்துரைக்கிறார் ஹன்ஷிகா.