மெனோபாஸ் பிரச்னைகள்

மெனோபாஸ் காலங்களில் பெண்கள் பெரும் அளவில் அவதியுறுவது ஹாட் ப்ளாஷஸ்
மெனோபாஸ் பிரச்னைகள்

மெனோபாஸ் காலங்களில் பெண்கள் பெருமளவில் அவதியுறுவது 'ஹாட் ப்ளாஷஸ்' எனப்படும் பிரச்னையால்தான். இது தொடர்ந்து ஏற்படுமாயின் அவர்களுக்கு இதய நோயை வரவழைத்துவிடும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

ஹாட் ப்ளாஷஸ் (Hot flashes) என்றால் என்ன? மாதவிடாய் சமயத்தில் திடீரென்று ஜூரம் அடிப்பது போன்ற கொதி உணர்வு உடல் முழுவதும் ஏற்படும், மிகவும் வியர்த்து உடல் தன்னிலையில் இல்லாமல் சோர்வும் எரிச்சலுமாக இருக்கும். ஏற்கனவே உதிரப் போக்கும் இத்தகைய உடல் சூடும் இணையும் போது பெண்கள் பெருமளவில் அவதியுறுகிறார்கள். இந்த ஹாட் ப்ளாஷஸ்தான்  மெனோபாஸின் முதன்மை அறிகுறியாகும். பெண்களின் வாழ்க்கைமுறை எத்தகையது என்பதற்கேற்ப இந்தப் பிரச்னையின் தீவிரம் இருக்கும். வாழ்க்கைத் தரத்தை சீராக வைத்திருப்போருக்கு மெனோபாஸ் தொந்திரவுகள் அதிகம் இருக்காது. ஆனால் உலகம் முழுவதும் 70 சதவிகித பெண்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதிலும் இதில் மூன்றில் ஒரு சதவிகிதத்தினர் தீவிர பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும் பதிவு செய்கிறது இந்த ஆய்வு.

ஹாட் ப்ளாஷஸ் ஏற்படும்போது உடலுக்கு மிகவும் அசவுகரியம் தரும். அது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அது பாதிப்படையச் செய்துவிடும். கார்டியோவாஸ்குலர், எலும்பு மற்றும் மூளை சம்மந்தப்பட்ட வியாதிகள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு என்கிறார் ஜோ ஆன் பின்கர்டன். இவர் நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயலர்.

இதைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், ஹாட் ப்ளாஷஸ் முன்பை விட தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு விரைவிலேயே ஏற்படுகிறது. அதுவும் அவர்கள் கருவுறும் காலம் முடியும் தருவாயில் அல்லது அதைத் தொடர்ந்து பத்து வருடங்களில் இப்பிரச்னை மிகுந்துள்ளது என்றார்.

ஹாட் ப்ளாஷஸ் பற்றிய ஆய்வறிக்கையை ஜர்னல் மெனோபாஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 40 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்ட, புகைப்பழக்கம் இல்லாத 272 பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர். ஹாட் ஸ்பாஷ்ஸை உருவாக்கக் கூடிய எண்டோதீலியல் செல்களின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தார்கள். அவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் வயது குறைந்தவர்களுக்கு ஹாட் ப்ளாஷஸ் ஏற்படும்போது அவர்களுக்கு இதய நோய் உட்பட்ட பிற பாதிப்புக்களின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் வயது முதிர்ந்த பெண்களுக்கு (54 – 60 வயது) ஹாட் ப்ளாஷ்ஸால் அத்தகைய பாதிப்புக்களை அவ்வளவாக ஏற்படுத்தவில்லை என்றும் கண்டறிந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com