கண்களின் கருவளையம் மறைய என்ன செய்யலாம்?

சமையல் அறையில் பல்லிகள் தொல்லை இருந்தால், முட்டை ஓட்டை சுத்தம் செய்து
கண்களின் கருவளையம் மறைய என்ன செய்யலாம்?

சமையல் அறையில் பல்லிகள் தொல்லை இருந்தால், முட்டை ஓட்டை சுத்தம் செய்து ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு கிச்சன் ஜன்னலில் வைத்திருந்தால் பல்லி அந்தப் பிரதேசத்துக்கே வராது.  தேவையில்லை என்று தூக்கி எறிந்துவிடும் முட்டை ஓட்டுக்கு பல்வேறு பலன்கள் உள்ளது. அது அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் எவ்வகையில் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா?

முட்டை ஓட்டை சுத்தமாக கழுவி பொடி செய்து கொள்ளவும்.  அந்த ஓட்டிலுள்ள கிருமிகளை நீக்க பதினைந்து நிமிடங்கள் அதை 150 டிகிரி சூட்டில் வைத்திருக்கவும். அதன் பிறகு முட்டையின் ஓட்டை எடுத்து, அதனுடன் மற்றொரு முட்டையை உடைத்து அதிலுள்ள வெள்ளைக் கருவை மட்டும் தனியாகப் பிரித்து அதை முட்டை ஓட்டின் பொடியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அது பேஸ்ட் பதத்தில் வந்ததும் அதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனுடன் கலந்து  கண்களுக்கு கீழே உள்ள கருவளையப் பகுதியில் தினமும் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களிலேயே வித்யாசம் தெரிய ஆரம்பிக்கும்.

கருவளையப் பிரச்னையைத் தவிர இந்த முட்டை ஓட்டுப் பொடி பலவிதங்களில் முக அழகுக்குப் பயன்படுகிறது. மேற்சொன்ன கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதுடன், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதற்கு, முட்டையின் ஓடு சிறந்த நிவாரணி. முட்டை ஓட்டைப் பொடி செய்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும். முகம் பளப்பளப்படையும்.

மருத்துவரீதியாகவும் முட்டை ஓடு பயன்படுகிறது. சரும அரிப்பு, மற்றும் அலர்ஜி நீங்க ஆப்பிள் சிடர் வினிகரில் முட்டையின் ஓட்டை கலந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து, பின் மெல்லிய துணியால் அக்கலவையை தொட்டு அலர்ஜி வந்த இடத்தில் தடவ வேண்டும். விரைவில் குணம் கிடைக்கும். பற்களின் மஞ்சள் கறை நீங்க தினமும் பற்களை துலக்கிய பின் கால்சியம் சத்து நிறைந்த முட்டை ஓட்டின் பொடியை, பற்களில் தேய்த்து வர மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com