இது சரியா? தவறா?

குடும்பம் முழுவதும் சேர்ந்து கோயில் அல்லது திருவிழாவுக்குச் செல்ல நினைத்து
இது சரியா? தவறா?

குடும்பம் முழுவதும் சேர்ந்து கோயில் அல்லது திருவிழாவுக்குச் செல்ல நினைத்து தேதியை முடிவெடுக்கும் போது அந்த வீட்டுப் பெண்களிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் கிளம்ப முடியும். காரணம் வீட்டுப் பெண்கள் யாரும் அந்தச் சமயத்தில் மாதவிலக்காகிவிட்டால் கோயிலுக்குச் செல்ல முடியாது. வெளியூருக்குச் செல்வதாக இருந்தால் பயணம் சிரமமாக இருக்கும். எனவே அந்த தேதிகளைத் தவிர்த்துவிட்டு வேறு நாட்களில் செல்ல முடிவெடுப்பார்கள். ஆனால் சமீப காலமாக பெண்கள் அலுவலக மீட்டிங், அல்லது பயணம் போன்ற காரணங்களுக்காக மாதவிலக்கு தள்ளிப் போக மாத்திரைகள் சாப்பிடுகின்றனர். 

பீரியட்ஸ், சம்ஸ் என்று சொல்லப்படும் மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் இப்போது எளிதாக மருந்துக்கடைகளிலும் கிடைக்கின்றன. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பெண்கள் சர்வ சாதாரணமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இது சரியா? தவறா? 

நிச்சயம் தவறுதான். பீரியட்ஸைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் பெண்களின் உடல்நலத்து எதிரானது. அதையும் மீறி உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும். மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின்படி என்றாவது ஒரு தடவை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. ஹார்மோன் சுரப்பில் பாதிப்புகள் ஏற்படும், உடல் நலம் பாதிக்கப்படும்போது மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். பீரியட்ஸைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி, மாதவிலக்காவதை தாமதப்படுத்தி விடும். இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்பட்டு தலைவலி,  வயிறு வலி,  ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இவ்வளவு பிரச்னைகளைத் தரும் மாத்திரைகளைத் தவிர்ப்பதுதான் சரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com