பெண்களுக்கு மட்டும் வரும் நோய் இது!

லிப்பெடீமா என்பது பெண்களின் கொழுப்பு சேரும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட
பெண்களுக்கு மட்டும் வரும் நோய் இது!

லிப்பெடீமா (Lipedema) என்பது என்ன?

லிப்பெடிமா என்பது பெண்களின் கொழுப்பு சேரும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். ‘பெயின்ஃபுல் ஃபேட் சின்ட்ரோம்’(Painful Fat Syndrome) என்றும் இதனை கூறுவார்கள். லிப்பெடிமா என்பது பிரதானமாக அடிபோஸ் திசுக்களின் (கொழுப்பு) பிரச்சனையாகும். அரிதாகக் காணப்படும் இந்த நோய் உலகளவில் சுமார் 11% பெண்களுக்கு உள்ளது.

பெரும்பாலும் முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் தான் இப்பிரச்னை அதிகம் தென்படுகிறது. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் சில பகுதிகளில் மட்டும் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்திருக்கும். அதாவது கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும். உடல் பருமன் காரணமாக லிப்பெடிமா ஏற்படுவதில்லை. சரியான உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சனை வரலாம்.

நோய்க்குறிகள்:

லிப்பெடிமாவை உடல் பருமனுடன் சிலர் குழப்பிக் கொள்வார்கள் அல்லது லிம்ஃபோடிமா (நிணநீர் சேருவதால் ஏற்படும் வீக்கம்) என்றோ தவறாகக் கருத வாய்ப்புள்ளது. உடலில் திரவம் கூடும்போது லிம்ஃபோடிமா ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளும் லிப்பெடிமா அறிகுறிகளும் ஒன்றேபோல் இருக்கலாம். ஆனால் லிப்பெடீமாவில் தோலுக்கடியில் கொழுப்பு சேரும், லிம்ஃபோடிமாவில் திரவம் சேரும். எனவே மருத்துவ பரிசோதனையின் பின்னரே இதனை உறுதிசெய்தி கொள்ள வேண்டும். காரணம் ஒவ்வொருவருக்கும் அறிகுறிகள் வேறுபடும்.

  • கால்களில் வீக்கம் இருப்பதைப் போல செங்குத்துத் தசைப்பகுதிகள் காணப்படலாம்
  • அதிக வலி இருக்கும் சிலருக்கு தொட்டால் அதிகமான வலியெடுக்கும்.
  • கைகள், மூட்டு அல்லது தொடைகளுக்கு மேல் கொழுப்பு ஒரு பட்டை போல் படிந்து காணப்படும்
  • நடப்பதுபெரும் சிரமமாக இருக்கும்.

எதனால் ஏற்படுகிறது?

இதுதான் காரணம் என்று இன்னும் மருத்துவ உலகம் வரையறுத்துச் சொல்லாத நோயிது. குடும்பத்தில் யாருக்காவது இப்பிரச்சனை இருந்திருந்தால், வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்தப் பிரச்னை பெண்கள் பூப்படையும் சமயத்தில், அல்லது கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் சமயத்தில் ஏற்படுவதால், ஹார்மோன்களுக்கும் இதில் பங்கிருக்கலாம் என நம்பப்படுறது. 

இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?

அதிநவீன கருவிகளின் உதவியுடன் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்துள்ள திசுக்களை உறிஞ்சி எடுக்கப்படும் லிப்போசக்ஷன் முறை  பயன்படுத்தப்படுகிறது. 

மசாஜ், கம்ப்ரஷன் சிகிச்சை, உடற்பயிற்சி போன்ற அறுவை சிகிச்சையற்ற சிகிச்சை முறைகளும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com