குளிர் நிலவாய் முகம் பள, பளக்க பாலில் மசாஜ் செய்யுங்கள்!

பால் சிறந்த க்ளென்ஸர் ஆகும். சிலருக்கு செயற்கை ரசாயனங்கள் கலந்த சுத்தப்படுத்திகளை
குளிர் நிலவாய் முகம் பள, பளக்க பாலில் மசாஜ் செய்யுங்கள்!

பால் சிறந்த க்ளென்ஸர் ஆகும். சிலருக்கு செயற்கை ரசாயனங்கள் கலந்த சுத்தப்படுத்திகளை உபயோகித்தால் தோலில் அலர்ஜி போன்று ஏற்படும்.அவர்களுக்கு பால் ஏற்றது. பாலை தினமும் முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் பொலிவாக இருக்கும்.

பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பட்டு போன்ற மிருதுவான சருமம் கிடைக்கும். 

தயிர் மற்றும் குங்குமப் பூ : தயிர் சிறந்த மாஸ்க்காக செயல்படுகிறது. தயிருடன் குங்குமப் பூ கலந்த நீரை கலந்து கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்,காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த 4 ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை இயற்கையாகவே பொலிவாகவும்,பிரகாசமாகவும் மாற்றுங்கள்.

தக்காளியின் சாற்றை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், தக தகவென ஜொலிக்கலாம்.

மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும்.

மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் : இது சிறந்த குளிர்ந்த தன்மையுள்ள மூலப்பொருள்,ஆன்டிபயாடிக் மட்டுமல்ல சில கிருமிகளையும் அழிக்கக்கூடிய குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மஞ்சளை ரோஜா நீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.காய்ந்ததும் முகத்தை அலச வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பிரகாசமாக மாறும்.

ரோஜாப்பூக்களை பால் சேர்த்து அரைத்து, வாரத்திற்கு 3 முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், எளிதில் ரோஜாப்பூ நிறக் கன்னங்களைப் பெறலாம். 

கேரட் சாறுடன் பாலைக் கலந்து பத்து நிமிடங்களுக்கு முகத்தில் மசாஜ் செய்து வந்தால் அழகான கன்னங்களைப் பெறலாம்.

கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் : கடலை மாவை கடுகு எண்ணெய் மற்றும் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.இதை குளிக்கும் முன் செய்ய வேண்டும்.சிறிது நேரம் கழித்து உலர்ந்ததும் குளிக்க வேண்டும்.இவை இறந்த செல்களை வெளியேற்றுகிறது மற்றும் தோலை ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது.மேலும் முகத்தை பிரகாசமாகவும் மாற்றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com