பெண்களுக்குத் தேவையா குடிப்பழக்கம்? ஆய்வு!

12 மில்லியன் பெண்களை சோதித்துள்ள புதிய ஆய்வு ஒன்றின் முடிவு வேதனையான
பெண்களுக்குத் தேவையா குடிப்பழக்கம்? ஆய்வு!

12 மில்லியன் பெண்களை சோதித்துள்ள புதிய ஆய்வு ஒன்றின் முடிவு வேதனையான இக்கேள்வியாகக் எழுப்புகிறது. மற்ற பெண்களை விட குடி போதை பழக்கத்துக்கு அடிமையான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் அதிகம் என்று அதிர்ச்சி செய்தியளிக்கிறது இந்த ஆய்வு.

தினமும் ஒரு கோப்பை வைன் அல்லது வேறு ஏதாவது மது வகைகளைப் பெண்கள் குடித்து வந்தால், அது அவர்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதுடன் மார்பகப் புற்றுநோய் எளிதில் வந்துவிடும் என்கிறது அந்த ஆராய்ச்சி. 

கடுமையான உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, வேகமாக சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்கிறது அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஃபார் கேன்சர் ரிசர்ச் மற்றும் வொர்ல்ட் கேன்சர் ரிசர்ச் ஃபண்ட்.

இந்தப் புதிய அறிக்கையில் பல விஷயங்கள் விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல், உயரத்துக்கு ஏற்ற சரியான எடை போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பதுடன் மதுப் பழக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியம் குறைகிறது என்றார் வாஷிங்டன்னைச் சேர்ந்த சிறப்பு நிபுணர் ஆனி மெக்டியர்னன். டயட், எடை மற்றும் உடற்பயிற்சி மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை 2010 வருடத்திலிருந்து இது குறித்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு 12 மில்லியன் பெண்களை 119 வகை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, 2,60,000 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்துள்ள காரணங்களை கண்டறிந்தனர்.

ஒரு சிறிய கோப்பை வைன் அல்லது பியர் (10 கிராம் ஆல்கஹால் அளவு) குடித்தாலும் கூட அது மாதவிடாய் முன்பு ஏற்படக்கூடிய மார்பப் புற்றுக்கான சாத்தியத்தை 5 சதவிகிதமும், மாதவிடாய்க்குப் பிந்தைய மார்பகப் புற்றுநோய்க்கு 9 சதவிகிதம் சாத்தியத்தையும் அதிகப்படுத்திவிடும் என்று உறுதியாகக் கூறுகிறது இந்த ஆய்வு

அதிகளவு உடற்பயிற்சியும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் மேற்கொண்ட 17 சதவிகித பெண்கள் மாதவிடாய்க்கு முன்பான மார்பகப் புற்றுநோய் சாத்தியங்கள் குறைந்திருந்தது. போலவே எவ்வித பயிற்சியும் செய்யாமல் இருந்தவர்களில் 10 சதவிகிதத்தினர் மாதவிடாய்க்கு பிந்தைய மார்பகப்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான பல காரணங்களை பெண்கள் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும், இந்த அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடிய நல்ல விஷயம் என்னவென்றால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அபாயங்களைத் தவிர்க்கும் வழிகளை அவர்கள் கடைபிடிக்க முடியும் என்றார் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஃபார் கேன்சர் ரிசர்சை சேர்ந்த ஆலிஸ் பென்டர்.

'நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, உடல் சுறுசுறுப்பு மிகவும் முக்கியம். சோர்வாக இருந்தாலும் மனத்தை திசை மாற்றி சுறுசுறுப்பாக இருக்க முயலுங்கள். அடுத்து கடினமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு முறைகளையும் கவனத்துடன் கடைபிடியுங்கள். நிறைய காய்கறிகள், கேரட்டுகள், க்ரீன் சாலட் போன்றவற்றை சாப்பிடுங்கள். குடிப்பழக்கத்தையும், குப்பை உணவுகள் சாப்பிடுவதையும் அடியோடு விட்டுவிடுங்கள். குடிப்பழக்கத்தை மறக்க முடியாவிட்டால் மிகக் குறைந்த அளவு மட்டும் குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள், இவை மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான தற்காப்பு கவசங்களாக செயல்படும்’ என்றார் ஆலிஸ் பென்டர்

குடிப்பழக்கம் பெண்களின் பாலுணர்வு சுரப்பியான ஈஸ்ட்ரோஜனில் ரத்த அளவுகளை அதிகரிக்கச் செய்து மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்திவிடுகிறது என்று கூறுகிறார்கள் யுஎஸ் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com