வாயு முத்ரா

முதுகுத் தண்டு நேராக இருக்கும் படியான நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும்.
வாயு முத்ரா

எப்படி செய்வது?

முதுகுத் தண்டு நேராக இருக்கும் படியான நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். அழுத்தங்கள் இன்றி லகுவாக சுகாசனத்தில் அல்லது சுலபமான நிலையில் இப்படி உட்கார வேண்டும்.

உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படியாக  கைகளைத் தொடைகளில் வைத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஆட்காட்டி விரலின் நுனியை கட்டைவிரல் அடியில் வைத்து, கட்டைவிரலை ஆள்காட்டி விரல் மீது சுருட்டவும்.

இப்போது மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டவும். இரண்டு கைகளிலும் இப்படிச் செய்யவும்.

மூச்சை அதன் இயல்பில் விட வேண்டும். சில தடவை மெதுவாகவும் சில தடவைகள் ஆழமாகவும் எடுக்கும் போதும் இதே நிலையைத் தொடரவும். மூச்சு எப்படி இருந்தாலும் கவனம் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நேரம் செய்வது?

இந்த எளிமையான முத்திரையை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் ஒரே சமயத்திலோ அல்லது 10-15 நிமிடங்கள் மூன்று பாகங்களாகவை செய்யலாம். வாயு முத்திரையை நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம், இருந்தாலும் காலை நேரம் தான் இதை செய்வதற்கு சிறந்தது.

என்ன பலன்?

வாயு முத்ரா செய்வதால் மனம் சாந்தமடையும். பதற்றமான மனம் அமைதி அடையும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுள் சீராகும். மூளையை சுறுசுறுப்படையச் செய்து நினைவாற்றலை அதிகரிக்கும். வாத உடல் அமைப்பு உடையவர்கள் இந்த முத்திரையை நிச்சயம் செய்யவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com