யோகா மேட் (Mat) தேவையா?

யோகா செய்யும்போது socks அணியலாமா? எப்படிப்பட்ட yoga mat பயன்படுத்த வேண்டும்?
யோகா மேட் (Mat) தேவையா?

யோகா செய்யும்போது socks அணியலாமா? எப்படிப்பட்ட yoga mat பயன்படுத்த வேண்டும்?

சத்குரு : யோகப்பயிற்சி செய்யும்போது socks அணியத் தேவையில்லை. நீங்கள் சரியாக ஹடயோகா செய்தால், இது உங்கள் உடலில் அதிகமான உஷ்ணத்தை உருவாக்குகிறது. உடலிலுள்ள செல்களிலேயே உஷ்ணம் உற்பத்தியாகிறது, அதனால் குளிர்பிரதேசங்களாக இருந்தாலும் குளிரை நீங்கள் உணரமாட்டீர்கள்.

உடலில் குறிப்பிட்ட சில இடங்கள் உள்ளன, அவை ஒன்றையொன்று தொடும்போது சில விஷயங்கள் நடக்கின்றன. ஹடயோகா செய்யும்போது பல நிலைகளில் உங்கள் குதிகால்களும் கால் கட்டைவிரல்களும் ஒன்றையொன்று தொட்டிருக்கும். அதனால் அப்போது சர்க்யூட் போன்ற அமைப்பு ஏற்படுகிறது. நீங்கள் socks அணிந்தால் அந்த அமைப்பு உருவாவதற்கு அது தடையாக இருக்கும்.

பூமியுடன் ஒன்றியிருத்தல்

எல்லாவற்றுக்கும் மேலாக, யோகா செய்யும்போது, எல்லாவற்றுடனும் ஒன்றியிருப்பதன் முதல்படி இந்த பூமியுடன் ஒன்றியிருப்பது. பூமியுடன் தொடர்பிலிருப்பது முக்கியமானது. அப்படி உங்களால் செய்யமுடியாத பட்சத்தில், ஹடயோகா சிறந்த பலன் தர, மண்ணையும் கழிமண்ணையும் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட இடத்தில், அதிகம் பதப்படுத்தப்படாத பட்டு வகையான raw silk, அல்லது sanforizing செய்யப்படாத raw cotton வகையில் செய்யப்பட்ட yoga mat பயன்படுத்தி யோகா செய்யலாம். (sanforizing என்பது பருத்தியை முன்பே சுருக்குவதற்கு செய்யப்படும் செயல்முறை)

நீங்கள் மறந்திருக்கலாம், ஆனால் உடல் பூமியின் ஒரு துண்டு என்பது உடலுக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. நீங்கள் யோகா செய்யும்போது, இதை விழிப்புணர்வாக உணரவேண்டும் என்று விரும்புகிறீர்கள், நீங்கள் வாழும் இந்த பூமியின் ஒரு அங்கமாக உங்களை உணர விரும்புகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தின் 80 சதவிகிதம், பூமியுடன் எந்த அளவு நீங்கள் இசைந்து இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தே இருக்கிறது. உங்கள் தீராத வியாதிகளில் 80 சதவிகிதம், பூமியுடன் சற்று ஒத்திசைவுடன் இருப்பதாலேயே மறைந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.

ரப்பர் yoga mat பயன்படுத்தலாமா?

ஈஷாவிலும் ரப்பர் yoga matகள் கிடைக்கின்றன என்று எனக்குத் தெரியும். “பருத்தி yoga mat அழுக்காகிவிடுகிறது சத்குரு, யார் துவைப்பார்கள்?” என்று என்னிடம் சொன்னார்கள், அதனால் நாங்களும் ரப்பர் yoga mat செய்தோம். என்னிடம், “இது விசேஷமான ரப்பர் சத்குரு, குளிரிலிருந்து பாதுகாப்புத் தரும்” என்றார்கள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், “நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க இங்கு இருக்கிறீர்களா அல்லது வாழ்க்கையிலிருந்து தப்பித்துக்கொள்ளவா?” நீங்களே அறியாமல் உங்களை பலவிதங்களில் வாழ்க்கையிலிருந்து தொலைவுபடுத்தி பாதுகாத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கலாம், உங்களுக்குள் இருக்கும் பேக்டீரியாக்களின் விகிதம் மற்ற அனைத்தையும் விட அதிகம். நுண்ணுயிர்கள் உங்களுக்குள் தங்குவது மட்டுமின்றி தொடர்ந்து உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கின்றன. உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால், அதுவே ஒரு நோய். உங்களை உலகின் மீதியிலிருந்து பாதுகாத்துக்கொண்டால், உங்களின் ஆற்றல் தொடர்ந்து குறைகிறது. அதனால் நீங்கள் வீட்டிலேயே இருப்பவராக இருந்தால், தினமும் காலையில் ஒரே இடத்தில் விழிக்கிறீர்கள் என்றால், யோகா செய்ய cotton அல்லது raw silk yoga mat பயன்படுத்துவது சிறந்தது, இவை பூமியுடன் தொடர்பில் இருக்க உதவும். இயற்கை மூலப்பொருட்கள் பூமிக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்புக்கு தடைசெய்யாதிருக்கும். 

நன்றி - http://isha.sadhguru.org/blog/ta/yoga-seyya-enna-yoga-mat-payanpaduthuvathu

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com