நோய், யோகா, ஆரோக்கியம்!

யோகா செய்வதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக ஒருவர் எப்படி இருக்க முடியும்?
நோய், யோகா, ஆரோக்கியம்!

யோகா செய்வதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக ஒருவர் எப்படி இருக்க முடியும்? இந்தக் கேள்வி பலருக்கும் பொதுவானதுதான். இதைப் பற்றி விரிவாக அலசுகிறது இக்கட்டுரை…

பொருள்தன்மை எப்போதுமே காரணம் மற்றும் விளைவு ஆகியவற்றிற்கு நடுவேதான் நடக்கிறது. இப்போது ஒரு நோய் தொற்று ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம், இந்த செயல் வெளியிலிருந்து நடந்துள்ளது: உதாரணத்துக்கு அது ஒரு கிருமியால் ஏற்பட்டது என்றால், இதன் விளைவு நோய்தொற்றாகத்தான் வெளிப்படும். இந்த நிலையை மாற்றுவதற்கு நீங்கள் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சாப்பிடுகிறீர்கள். அந்த செயல் வெளியிலிருந்து செய்யப்பட்டதால், அதை மாத்திரைகள் மூலம் அழித்து விடுகிறீர்கள்.

வெளி காரணத்தால் ஏற்படாத மற்ற நோய்கள், கிருமித் தொற்றுடன் ஒப்பிட்டால் அதன் காரணம் மிக ஆழமாக இருக்கும். இது போன்ற நோய்கள் வெளிப்படுவதற்கு, சக்தி உடலில் ஏற்படும் ஒரு நிலைகுலைவு அல்லது சீர்கேடுதான் காரணமாக இருக்கும். அது அங்கிருந்து பௌதீக உடலுக்கோ அல்லது மனோ உடலுக்கோ பரவுகிறது.

சக்தி நிலை சிகிச்சையைப் (pranic healing) போன்ற ஒன்றையோ அல்லது வேறொரு சிகிச்சை முறையிலோ உங்களால் அதன் விளைவுகளை குறைக்கத்தான் முடியும். உங்கள் சக்தி நிலையின் மீது சிறிதளவு அல்லது முழுமையான கட்டுப்பாடு இருந்தால், காரணத்திற்கும் அதன் விளைவுக்கும் நடுவே உங்களால் ஒரு திரையைப் போட முடியும். இப்படிச் செய்வதால் அந்த எதிர்வினை இறந்துவிடுகிறது, ஆனால் அதன் காரணம் அப்படியே இருக்கும்.

இயற்கையையும், உயிர்சக்தியையும் பொறுத்தவரை, விளைவு என்பதே, அங்கே ஒரு காரணம் உள்ளது, உங்கள் சக்திநிலை தொந்தரவுக்குள்ளாகிறது என்பதை தெரியப்படுத்துகிறது. இன்னொருவருக்கு இருக்கும் நோயின் மூலத்தை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளத் தெரியாவிட்டால், குணமாக்குதல் என்பது உண்மையில் சாத்தியமில்லை.

அதே நேரத்தில், அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டால், அதன் காரணத்தோடு தொடர்பு கொள்ள முடியும். விழிப்புணர்வை கொண்டு வந்து, வந்ததை ஏற்றுக் கொள்வதைப் பற்றிப் பேசும்போது, தோல்வி மனப்பான்மையைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் அந்த நோயைப் பற்றி உண்மையிலேயே அறிந்து கொண்டுவிட்டால், அதன் காரணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். உங்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி உங்கள் விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டால், சக்திநிலையில் அது உடனடியாக உயிர்ப்பானதாக மாறிவிடும், இதனால் பல விஷயங்கள் நடக்கத் துவங்கும்.

உங்களுடைய சக்தி உடல் எப்படி சீர்குலைகிறது? தவறான வாழ்க்கை முறை, தவறான எண்ண வடிவங்கள், தவறான உணர்ச்சிகள் அல்லது இவை எல்லாம் சேர்ந்து இருப்பதால் சக்தி உடல் சீர்கெடுகிறது. குறிப்பிட்ட ஒரு கர்ம கட்டமைப்பை நீங்கள் உருவாக்குவதால், அது ஒரு சக்திநிலைத் தடுமாற்றைத்தை ஏற்படுத்தி, பௌதீக உடலுக்குள் நோயாக உருமாறிவிடுகிறது.

நீங்கள் உங்கள் சக்திகளை, ஹீலிங் மூலமாக அல்லது மனக்குவிப்பின் மூலமாக அல்லது விழிப்புணர்வின் மூலமாக ஓரளவு சரி செய்தாலும், அது உருவாக்கிய கர்ம வினைகள் தீர்வதில்லை. உங்கள் கர்ம வினைகள் உங்கள் சக்திநிலைகளுக்குள் ஒரு சாப்ட்வேர் ப்ரோகிராம் போல பதிவாகிவிடுகின்றன. அந்த ப்ரோகிராம் எல்லைக்குள் மட்டும்தான் அவை செயல்பட முடியும்.

உங்களுக்குள் இருக்கும் உயிர்சக்திதான் உங்கள் முழு உடலையும் உருவாக்கியுள்ளது. அவற்றால் அந்த அளவு செயல்பட முடியும்போது, இதயத்தில் இருக்கும் ஒரு சிறிய ஓட்டையையோ அல்லது அடைப்பையோ நீக்க முடியாதா?

மக்களுக்கு யோகா கிரியாக்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சிகிச்சைகள் இயல்பாகவே நடக்கும். சிகிச்சைக்காக இதை கற்றுக் கொடுக்காவிட்டாலும், அது கண்டிப்பாக நடக்கும். இதில் சாதனாவும் அடங்கியிருக்கிறது, இதன் மூலம் கர்மாவையும் நம்மால் கரைக்க முடியும். காரணம் என்பது கரைக்கப்பட்டால், விளைவு என்பதே இருக்காது.

நன்றி : ஈஷா மையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com