வாஜ்பாய் உறவினர் கருணா சுக்லா பா.ஜ.க.வில் இருந்து விலகல்

First Published : 27 October 2013 02:43 AM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினரான கருணா சுக்லா, பா.ஜ.க.வில் இருந்து சனிக்கிழமை விலகினார். இது சத்தீஸ்கரில் பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பி.யான கருணா சுக்லா, பா.ஜ.க.வின் மகளிர் அணியின் தேசியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

சத்தீஸ்கரில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு சிலர் கட்சியைக் கைப்பற்றியுள்ளனர். மாநிலத்தில் மூத்த தலைவர்களின் கருத்துகளுக்கு கட்சி நிர்வாகம் செவிமடுப்பதில்லை. சிலரது கரங்களில் அதிகாரம் குவிந்துள்ளது. அவர்கள் தங்கள் விருப்பப்படி கட்சி அமைப்பை நடத்திச் செல்கின்றனர்.

கட்சியில் நான் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டதால் மனவேதனை அடைந்துள்ளேன். கடந்த இரு ஆண்டுகளாக கட்சி விவகாரங்களில் என்னை யாரும் கலந்தாலோசிப்பதில்லை. என்னைச் சந்திக்கக் கூட கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கும், சத்தீஸ்கர் மாநிலப் பொறுப்பாளர் ஜே.பி.நட்டாவும் நேரம் ஒதுக்கவில்லை. எனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றார் கருணா சுக்லா.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ""தற்போதைக்கு என் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

அவரது ராஜிநாமா குறித்து கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஜே.பி.நட்டா கூறுகையில், ""இது கட்சியின் உள்விவகாரம். கருணாவை சமாதானப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்'' என்றார்.

சத்தீஸ்கரில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிட, இப்போதைய எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பா.ஜ.க.வில் கொந்தளிப்பான நிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.