யோகா ஒரு மானுட கலாசார சொத்து: யுனெஸ்கோ அங்கீகாரம்

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் "மானுட கலாசாரத்தின் பாரம்பரியச் சொத்து' என்ற அங்கீகாரத்துடன் யோகக் கலை சேர்க்கப்பட்டுள்ளது.
யோகா ஒரு மானுட கலாசார சொத்து: யுனெஸ்கோ அங்கீகாரம்

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் "மானுட கலாசாரத்தின் பாரம்பரியச் சொத்து' என்ற அங்கீகாரத்துடன் யோகக் கலை சேர்க்கப்பட்டுள்ளது.
இது, யோகாவுக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான யோகக் கலையை உலகெங்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் விளைவாக, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.நா. அறிவித்தது.
இதனால் உலக நாடுகள் முழுவதிலும் தற்போது யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நோய்களை யோகக் கலை மூலமாக குணமாக்கும் சிகிச்சை முறைகளும் பெரும்பாலான நாடுகளில் பிரபலடைந்து வருகின்றன.
இதனிடையே, யோகக் கலையை யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில், நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கிய யுனெஸ்கோவின் 24 நாடுகளின் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் (பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் குழு) இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு கலை அல்லது கலாசாரம் சார்ந்த விஷயங்கள், யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தக் குழுவின் ஒப்புதல் அவசியமாகும்.
இந்நிலையில், பல்வேறு கடுமையான ஆய்வுகளுக்குப் பிறகு, யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் "மானுட கலாசாரத்தின் பாரம்பரியச் சொத்து' என்ற அங்கீகாரத்துடன் யோகக் கலையை சேர்க்க இந்தக் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யுனெஸ்கோ பிரதிநிதித்துவப் பட்டியலில் யோகாவை இணைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இப்பட்டியலில் யோகாவை இணைக்கும் விவகாரத்தை 2017-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க யுனெஸ்கோ நிபுணர்கள் குழு பரிந்துரைத்த போதிலும், அதனை பன்னாட்டுப் பிரதிநிதிகள் குழுவின் ஒருமித்த ஆதரவுடன் முறியடித்து யோகா வெற்றி பெற்றுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com