டிசம்பர் இறுதிக்குள் பிரச்னை தீரும்

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பானது தாற்காலிகமாக சில பிரச்னைகளை உருவாக்கியிருப்பினும், அது நீண்ட
டிசம்பர் இறுதிக்குள் பிரச்னை தீரும்

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பானது தாற்காலிகமாக சில பிரச்னைகளை உருவாக்கியிருப்பினும், அது நீண்ட காலத்துக்கு பலன்களைக் கொடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு வெகுகாலம் நீடிக்காது. சிறிது காலத்துக்கு அதன் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது நீண்டகால பலன்களைக் கொடுக்கத் தொடங்கும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் அதிக அளவில் ராபி பருவத்தில் விதைப்பு அதிகரித்துள்ளது. வாகன உற்பத்தித் துறையிலும் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை.
உலக அரங்கில் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நாடாக இந்தியா திகழ்கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மறைமுக வரிவதிப்பு முறை அமலில் இருக்க அனுமதிக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பு முறையான சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அடுத்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்.ஜிஎஸ்டி வரிவதிப்பு முறை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டமும் அனுமதி அளிக்காது. மத்திய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்த உத்தேசித்துள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மீண்டும் எச்சரிக்கை: இதனிடையே, கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக வெள்ளையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப மாட்டார்கள் என்று மத்திய அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com