பயிர்க்கடன் வட்டியை செலுத்த கால அவகாசம்: மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

"ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் விவசாயிகள் பணம் இல்லாமல் தவித்து வருவதால்,

"ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் விவசாயிகள் பணம் இல்லாமல் தவித்து வருவதால், அவர்கள் பெற்ற பயிர்க்கடனுக்கான வட்டியை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்' என்று மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் கேள்விநேரத்தின்போது அதிமுக எம்.பி. ஏ.நவநீதகிருஷ்ணன் இந்த விவகாரத்தை எழுப்பி பேசியபோது, "விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்த போதிய பணம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, அவர்கள் வட்டித் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும்' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜனும் இதே விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "பயிர்க் கடனுக்கான வட்டித் தொகையை
விவசாயிகள் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்' என்றார்.
இதற்கிடையே, வங்கிகளில் உள்ள புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் இருப்பு குறித்து தினமும் கண்காணித்து, தேவைக்கேற்ப புதிய ரூபாய் தாள்கள் அச்சடிக்க உத்தரவிடப்பட்டு வருகிறது என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
நெசவாளர்களுக்காக காப்பீட்டுத் திட்டங்கள் ஒருங்கிணைப்பு: நெசவாளர்களுக்காக அனைத்து காப்பீட்டுத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
""அழைப்பு முறிவு' பிரச்னையில் முன்னேற்றம்': இந்நிலையில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி, தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் அழைப்பு முறிவு (கால் டிராப்) பிரச்னையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதிலில், "டிஜிட்டல் தகவல்கள் திருடப்பட்டாலோ அல்லது டிஜிட்டல் வடிவில் இருக்கும் ரகசியத் தகவல்கள் கசிந்தாலோ இழப்பீடு அளிப்பதற்கான பிரிவு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com