தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 8 மாற்றுத்திறனாளிகளுக்கும், இரு தனியார் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வில் சிறப்பாக செயல்படுவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து தேசிய விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்தவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சி
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வில் சிறப்பாக செயல்படுவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து தேசிய விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்தவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சி

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 8 மாற்றுத்திறனாளிகளுக்கும், இரு தனியார் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், குறைந்த பார்வைத் திறன் கொண்ட சிறந்த ஊழியருக்கான விருது விழுப்புரத்தைச் சேர்ந்த சதாம் ஹுசேனுக்கு (25) வழங்கப்பட்டது. பி.எஸ்ஸி (ஐடி), எம்பிஏ படித்துள்ள இவர் மென்பொருள் உருவாக்கம், இணையதள வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார்.
தொழுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு சுயமாக வேலை செய்வோருக்கான பிரிவில், விழுப்புரத்தைச் சேர்ந்த கணேசனுக்கு (57) விருது வழங்கப்பட்டது. காது கேட்புத் திறன் குன்றியவர் பிரிவில் விருது பெற்ற சேலத்தைச் சேர்ந்த சி.பாபு (35), எம்சிஏ, எம்பிஏ, எம்இ படிப்புகளை முடித்து விட்டு சேலம் உருக்காலையில் பணியாற்றி வருகிறார்.
நிரந்தர வகை முடக்கு நோயாகக் கருதப்படும் "செரிபரெல் பால்சி' பாதிப்புக்கு ஆளான, சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த விமலா நாகலிங்கத்துக்கு (35) விருது கிடைத்துள்ளது. இவர் சென்னை ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் (நிப்மெட்) மூளை பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பி வாழ்வோர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஏ.புனிதாவுக்கு (30) விருது வழங்கப்பட்டது. திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.கல்லூரியில் உதவியாளராக புனிதா பணியாற்றி வருகிறார்.
இதேபோல, மன நோய் பாதிப்புகளில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் டிஎம்டி மலர் (45), சுமார் 10 ஆண்டுகளை தெருவிலேயே கழித்துள்ளார். பின்னர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்ந்த இவர், சுயவுதவிக் குழு சமையல் கூடத்தில் பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஊக்குவித்து வருவோருக்கான பிரிவில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஆச்சி நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் பத்மசிங் ஐசக் விருது பெற்றார்.
இதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை கொடுத்து வரும் வி-தேஷ் என்ற தனியார் நிறுவனத்துக்குரிய விருதை அதன் நிர்வாகி ஷஷாங்க் அனாத் பெற்றுக் கொண்டார். பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும், தொழுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் பிரிவுக்கான விருது சென்னை அம்பத்தூரில் உள்ள "சிட்டிசன் சொசைட்டி' அமைப்பை நடத்தி வரும் குணசேகரனுக்கும், காது கேட்புக் குறைத்திறன் வாய்ந்த பிரிவில் கோவையைச் சேர்ந்த கே.முரளிக்கும் விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுச் சேவை வழங்கும் சிறந்த மாவட்ட நிர்வாகங்களுக்கான பிரிவில் திருச்சி தேர்வாகியிருந்தது. ஆனால், விருது பெற திருச்சி மாவட்ட ஆட்சியர் தில்லிக்கு வர இயலவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com