ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க பெட்ரோல் நிலையங்களில் நவீன வசதிகள்

ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, நாட்டில் ரொக்கமில்லா பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிக்கும் விதமாக, நாடெங்கிலும் உள்ள பெட்ரோல் மையங்களில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு சனிக்கிழமை தொடங்கியது.
ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க பெட்ரோல் நிலையங்களில் நவீன வசதிகள்

ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, நாட்டில் ரொக்கமில்லா பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிக்கும் விதமாக, நாடெங்கிலும் உள்ள பெட்ரோல் மையங்களில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு சனிக்கிழமை தொடங்கியது.
தில்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து எண்ணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
மக்களிடையே ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைத்து, ரொக்கமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், பெட்ரோல் நிலையங்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
அதன் முதல்கட்டமாக, சனிக்கிழமை முதல் நாடெங்கிலும் உள்ள 53,077 பெட்ரோல் நியையங்களில் மின்னணு பணப் பரிமாற்ற முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.
அந்த பெட்ரோல் நிலையங்களில் நவீன வசதிகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் வாடிக்கையாளர்கள் எரிபொருளை வாங்கிக் கொள்ளலாம் என்பதுடன், அந்த வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு அளிக்கப்படும்.
அடுத்தக்கட்டமாக, 18,000 சமையல் எரிவாயு மையங்களிலும், வாகன எரிவாயு நிரப்பு மையங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரொக்கமில்லாப் பணப் பரிமாற்ற முறை எளிமையானது, பாதுகாப்பானது என்பதுடன் வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கருப்புப் பணத்தை ஒழிக்கவும் அந்தப் பட்டுவாடா முறை கைகொடுக்கும். அனைத்து முக்கிய ஊர்களிலும் உள்ள மூன்றில் இரண்டு பங்கு பெட்ரோல் நிலையங்களில் விழிப்புணர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தற்போது 29,905 பெட்ரோல் நிலையங்களில் மின்னணுப் பணப் பரிமாற்ற இயந்திரங்கள் உள்ளன.
அங்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி எரிபொருள் வாங்குவது மட்டுமன்றி, பணமெடுப்பதற்காகவும் அந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதுதவிர, 4,700 பெட்ரோல் நிலையங்களில் இணையதளம் மூலமாகவும், செல்லிடப் பேசிகள் மூலமாகவும் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன.
இந்த வசதி, தினந்தோறும் மேலும் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
பெட்ரோல் நிலையங்களில் மின்னணு பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com