ஆர்பிஐ துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா நியமனம்

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ள விரால் வி. ஆச்சார்யாவை (42), ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
ஆர்பிஐ துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா நியமனம்

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ள விரால் வி. ஆச்சார்யாவை (42), ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
இதற்கான உத்தரவை அமைச்சரவையின் நியமனக் குழு புதன்கிழமை பிறப்பித்தது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், துணை ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல், அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து துணை ஆளுநர்கள் பதவிக்கு 4 பேர் இருக்க வேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே இருந்தனர்.
இதைத் தொடர்ந்து ரகுராம் ராஜனை போல் கல்விப் பின்னணி உள்ள விரால் வி. ஆச்சார்யாவை துணை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் நிதித் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றி வரும் விரால் வி.ஆச்சார்யா, கடந்த 1995-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஐஐடியில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்றார்.
கடந்த 2001-இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நிதித் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு (பி.ஹெச்டி) படித்துள்ளார்.
லண்டன் தொழிற்கல்லூரியின் கல்வி இயக்குநராகவும், பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பொருளாதார ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் இணைந்து பணியாற்றியுள்ள ஆச்சார்யா, ராஜனின் செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டியுள்ளார்.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்புக்குப் பின்னர், பணத்தை டெபாசிட் செய்யவும், எடுக்கவும் விதிக்கப்பட்ட விதிமுறைகளில் தொடர்ந்து மாற்றங்கள் செய்து வருவதால் ரிசர்வ் வங்கி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் ஆச்சார்யாவை மத்திய அரசு நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com