அடிச்சது லக்கி ப்ரைஸ்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் இப்போ ‘டபுள்’ ஆகப்போகுது!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய சம்பளத்தை  இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அடிச்சது லக்கி ப்ரைஸ்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் இப்போ ‘டபுள்’ ஆகப்போகுது!

புதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய சம்பளத்தை  இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மாதம் ரூ.50000-த்தை ஊதியமாக பெற்று வருகிறார்கள்..அது போக இவர்களுக்கு என்று தனியான சலுகைகளும் உண்டு. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உ யர்த்துவது குறித்து  முடிவெடுக்க, பா.ஜ.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத்   தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக குழுவை மத்திய அரசு நியமித்தது.

தற்போது இந்தக் குழுவின் பரிந்துரைகள் அரசுக்கு தரப்பட்டுள்ளன. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  தற்போதைய மாத ஊதியமான ரூ.50000-ஐ , ரூ.1 லட்சமாக உயர்த்த அந்த குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். மேலும் அவர்களுகான சலுகைகளை அதிகப்படுத்தவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த பரிந்துரைகளை நிறைவற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com