நிதி ஒதுக்குவதால் மட்டும் தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியாது: நரேந்திரமோடி

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாமல் வெறுமனே நிதி ஒதுக்குவதால் மட்டுமே தூய்மையான இந்தியாவை உருவாக்கிவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் "தூய்மை இந்தியா" திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற நபர்களுக்கு விருதுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங
தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் "தூய்மை இந்தியா" திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற நபர்களுக்கு விருதுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாமல் வெறுமனே நிதி ஒதுக்குவதால் மட்டுமே தூய்மையான இந்தியாவை உருவாக்கிவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் "தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளதையொட்டி, "இந்தியாவில் தூய்மை நிலை' என்ற பெயரிலான கருத்தரங்கம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
மேலைநாடுகளை ஒப்பிடும்போது, தூய்மை விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.
வளமான நாட்டை உருவாக்க அங்குள்ள மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். தூய்மை பேணப்படும் போதுதான் ஆரோக்கியம் அங்கு இருக்கும். அந்த நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதுதான் "தூய்மை இந்தியா' திட்டம்.
இந்தத் திட்டம் ஏதோ அரசின் திட்டம் என்று மக்கள் நினைக்கக்கூடாது. அரசு மட்டுமே ஒரு நாட்டை தூய்மைப்படுத்திவிட முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தத் திட்டத்தை ஓர் இயக்கமாக மாற்றினால் மட்டுமே தூய்மையான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்.
தூய்மை இந்தியா திட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு உள்ளது. எனினும், தூய்மை பற்றிய விழிப்புணர்வு நம் மக்கள் மனதில் பெரிதாக இல்லை. சாலைகளில் குப்பைகள் கொட்டிக் கிடந்தால் அதனை அருவருப்பாக பார்க்கும் மக்கள், தூய்மை என்பதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ள ஏனோ மறுக்கிறார்கள். இந்த எண்ணத்தை முதலில் ஒழிக்க வேண்டும்.
நம் வீட்டை எப்படி தூய்மையாகப் பேண விரும்புகிறோமா, அப்படிதான் நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவைப் பொருத்தவரை, பண்டைய காலத்திலிருந்தே ஒவ்வொரு பொருள்களையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. அந்த வகையில், குப்பைகளை மறுசுழற்சி செய்து அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் நமக்கு செல்வமும், அதனுடன் சேர்ந்து தூய்மையும் கிடைக்கப்பெறும்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாமல், இத்திட்டத்துக்கு வெறுமனே நிதி ஒதுக்குவதால் மட்டும் தூய்மையான இந்தியாவை உருவாக்கிவிட முடியாது என்றார் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com