திருப்பதி உயிரியல் பூங்காவில் 7 குட்டிகளை ஈன்ற புலிகள்

திருப்பதி உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகள், 7 குட்டிகளை ஈன்றன. அவை, ஞாயிற்றுக்கிழமை கண் திறந்தன.
திருப்பதி உயிரியல் பூங்காவில் 7 குட்டிகளை ஈன்ற புலிகள்

திருப்பதி உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகள், 7 குட்டிகளை ஈன்றன. அவை, ஞாயிற்றுக்கிழமை கண் திறந்தன.

திருப்பதி அலிபிரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

இப்பூங்காவில் பிறந்து வளர்ந்த 4 வயதான வெள்ளைப் புலி ராணி, சில நாள்களுக்கு முன் 4 குட்டிகளை ஈன்றது.

அதேபோல், பெங்களூரு உயிரியல் பூங்காவிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 12 வயதான கமலா என்ற பெங்கால் புலி 3 குட்டிகளை ஈன்றது.

இந்த புலிக் குட்டிகள், ஞாயிற்றுக்கிழமை கண் திறந்தன. இவற்றைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதனால் இன்னும் 10 நாள்களுக்கு, புலிக் குட்டிகளைக் காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com