தகவல்கள் திருட்டு: எஸ்பிஐ உட்பட சுமார் 30 லட்சம் வங்கி டெபிட் கார்டுகள் முடக்கம்

ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு பின் எண் போன்றவை திருடப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
தகவல்கள் திருட்டு: எஸ்பிஐ உட்பட சுமார் 30 லட்சம் வங்கி டெபிட் கார்டுகள் முடக்கம்


மும்பை: ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு பின் எண் போன்றவை திருடப்பட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 30 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், இந்தியாவின் முன்னணி வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களில் சுமார் 6 லட்சம் பேரின் டெபிட் கார்டுகளை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

மேலும் சில வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்கள் உடனடியாக டெபிட் கார்டின் பின் எண்ணை மாற்றும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற பரிவர்த்தனைகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் சில நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏடிஎம் கார்டுகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடக்கியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில் மட்டும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com