கருடசேவை தரிசன முறையில் மாற்றம் அவசியம்

திருமலையில் கருடசேவையின்போது பக்தர்களை அனுமதிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று திருப்பதி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி யோசனை தெரிவித்துள்ளார்.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)

திருமலையில் கருடசேவையின்போது பக்தர்களை அனுமதிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று திருப்பதி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் ஆந்திர காவல்துறை தலைவர் சாம்பசிவ ராவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது நடக்கும் கருடசேவையைக் காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

மாட வீதியில் உள்ள கேலரிகளில் சுமார் 1.80 லட்சம் பக்தர்கள் மட்டுமே அமர முடியும். மற்றவர்கள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நின்று கருடசேவையைக் கண்டு வருகின்றனர். கருடசேவை தொடங்கியவுடன், பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தடுப்பு வேலிகளை கடந்து முன்னோக்கி நகர்கின்றனர்.

இதனால், சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூர்ச்சை அடைகின்றனர். மேலும், உயிர் பலி நிகழும் அபாயமும் உள்ளது.

அதனால், கருடசேவையின்போது சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஏழுமலையான் தரிசனத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தியது போல், கருடசேவையின் போது கேலரிகளில் அமரக் கூடிய எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com