பிகாரில் புகார் தெரிவிக்கும் வாட்ஸ்அப் நம்பரில் லாலு மகனுக்கு வந்த பிரபோசல்கள்

பிகாரில் பொது மக்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் நம்பரில், துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு 44 ஆயிரம் பெண்களிடம் இருந்து பிரபோசல்கள் வந்துள்ளன.
பிகாரில் புகார் தெரிவிக்கும் வாட்ஸ்அப் நம்பரில் லாலு மகனுக்கு வந்த பிரபோசல்கள்


பாட்னா: பிகாரில் பொது மக்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் நம்பரில், துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு 44 ஆயிரம் பெண்களிடம் இருந்து பிரபோசல்கள் வந்துள்ளன.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வாட்ஸ்அப் நம்பரில் மொத்தம் 47 ஆயிரம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் தேஜஸ்விக்கு 44 ஆயிரம் தனிப்பட்ட மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில், பெண்கள் தங்களது பெயர், தங்களது சுய விவரம், உயரம், எடை போன்ற விஷயங்களை தெரிவித்துள்ளனர்.

பிகார் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி (26), கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான சாலைகள் குறித்து மூன்றாயிரம் புகார்கள் வந்துள்ளன என்று தெரிவித்தார்.

இது குறித்து தேஜஸ்வி என்ன சொல்கிறார் தெரியுமா?, "நான் திருமணமானவனாக இருந்திருந்தால் இது எனக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கும். நல்ல வேளை நான் பேச்சுலர்" என்று சொல்லி சிரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com