மதக் கலவரங்களைத் தூண்டுகிறது திரிணமூல்: மேற்கு வங்க ஆளுநரிடம் பாஜக புகார்

மேற்கு வங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் மதக் கலவரங்களை தூண்டிவிடுவதாகவும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கலவரக்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அந்த மாநில ஆளுநர்

மேற்கு வங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் மதக் கலவரங்களை தூண்டிவிடுவதாகவும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கலவரக்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அந்த மாநில ஆளுநர் கே.என்.திரிபாதியை சந்தித்து பாஜக புகார் அளித்தது.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் ஜெயபிரகாஷ் மஜும்தார், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எவ்வாறு உதவியது என்பது குறித்து ஆளுநர் திரிபாதியிடம் எடுத்துரைத்தோம். இதுபோன்ற சமயங்களில் ஒருசாரருக்கு சாதகமாகவே காவல் துறையும் செயல்பட்டது.
அடிப்படைவாதமும், தேசவிரோத சக்திகளும் மாநிலத்தில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வாக்குவங்கி அரசியலுக்காக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் தலையிடமால் மாநில அரசு கண்ணை மூடிக் கொண்டிருக்க முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தோம் என்றார் ஜெயபிரகாஷ் மஜும்தார்.
பாபுல் சுப்ரியோவின் மீதான தாக்குதலைக் கண்டித்து, முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டை நோக்கி வியாழக்கிழமை செல்ல முயன்றபோது போலீஸார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாஜகவினர் வெள்ளிக்கிழமையை கருப்பு தினமாக அனுசரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com