ஆன்மிக பாரம்பரியத்தை பாதுகாக்காமல் இந்தியா வல்லரசாக உருவாக முடியாது

இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாக்காமல் நம்மால் வல்லரசாக உருவாக முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஆன்மிக பாரம்பரியத்தை பாதுகாக்காமல் இந்தியா வல்லரசாக உருவாக முடியாது

இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாக்காமல் நம்மால் வல்லரசாக உருவாக முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
ஹரியாணா மாநிலம், குருúக்ஷத்ரத்தில் அமைந்துள்ள குருகுல குருúக்ஷத்ரா பல்கலைக்கழகத்தின் 104-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. சீனாவுக்கு அடுத்த மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் பழமையான ஆன்மிகப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வருவதன் மூலமாக வளமான மற்றும் வலிமை பொருந்திய நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் பாரம்பரியமான யோகக் கலையை உலக நாடுகள் அனைத்தையும் ஏற்கச் செய்த பெருமையும் மோடியையே சாரும்.
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது. நமது ஆன்மிகம் கூறும் ஒழுக்கநெறிகள் மூலமே இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்க இயலும். தற்போது வலுவிழந்து வரும் பாரம்பரியத்துக்கும், நெறிகளுக்கும் புத்துயிர் ஊட்ட வேண்டியது நமது கடமையாகும்.
இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாக்காமல் நம்மால் வல்லரசாக உருவாக முடியாது என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com