ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு கணக்குத் தணிக்கையாளர்களுக்கு சவால்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா அமல்படுத்தப்பட்ட பிறகு, பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் அதேநேரம் மிகப் பெரிய சவால்களையும்...
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு கணக்குத் தணிக்கையாளர்களுக்கு சவால்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா அமல்படுத்தப்பட்ட பிறகு, பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் அதேநேரம் மிகப் பெரிய சவால்களையும் கணக்குத் தணிக்கையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவனத்தின் சார்பில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:
கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளர் மிக முக்கியப் பங்காற்ற வேண்டும். ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வந்த பிறகு, அதிக வாய்ப்புகள் உருவாகும் அதே நேரத்தில் மிகப் பெரிய சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, இந்த மாற்றத்தை எதிர்கொள்ள நீங்கள் (கணக்குத் தணிக்கையாளர்கள்) தயாராக வேண்டும். நமது தேசத்தில் எந்தவொரு கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவனமும் ஊழலில் ஈடுபடவில்லை என்பது இத்தருணத்தில் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com