தலாக்: ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறை ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்தார்.
தலாக்: ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறை ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்தார்.
இஸ்லாமிய மதத்தில் மூன்று முறை தலாக் கூறி திருமண உறவிலிருந்து ஆண்கள் விலகும் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்பதால் அந்த முறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் ஒரே சட்டமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசு, முஸ்லிம் பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தலாக்குக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வப்போது காரசாரமான விவாதத்துக்குள்ளான தலாக் முறைக்கு தடை விதிக்க முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை கூறியதாவது:
தலாக் முறை அரசமைப்புக்கும், சட்டத்துக்கும், ஜனநாயகக் கொள்கைகளுக்கும், நாகரிக சமுதாயத்துக்கும் எதிரானது என்ற வகையிலான கருத்துகளை அதிகம் பேர் முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இதற்காக ஏற்கெனவே அதிக நேரம் செலவழிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலாக் முறையை ஒழிக்க இதுவே சரியான தருணம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முன்பு, அனைவரும் சமம். பொது சிவில் சட்டத்தை நேர்மையற்ற முறையில் மத்திய அரசு அமல்படுத்தும் என்று சிலர் எங்கள் மீது தவறான பிரசாரத்தை முன்வைக்கின்றனர்.
மத்திய அரசானது அனைத்து முடிவுகளையும் வெளிப்படையாகவே எடுக்கிறது. அதேபோல், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முடிவை நாடாளுமன்றத்தில் விவாதிப்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com