பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு (2017) சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் முனைப்போடு காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. தேர்தல் பிரசார உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பகுதியாக, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசிப் பதிவு செய்த தகவல் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி மூலம் அனுப்பப்படுகிறது.
இதற்காக கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் அளிக்கும் விவசாயிகளுக்கு ராகுல் காந்தியின் குரல் தகவல் அனுப்பப்படுகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவது உங்களுக்குத் தெரியும். மாநிலத்தில் நமது (காங்கிரஸ்) ஆட்சி நடைபெற்றபோது அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தோம்.
விவசாய விளைபொருள்களுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை உயர்த்தினோம். கடந்த 2008-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.70,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு உதவினோம்.
விவசாயிகளின் குரலை காங்கிரஸ் கேட்கும் என்று உறுதியளிக்கிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன் தள்ளுபடி கோரும் விண்ணப்பங்களில் கையெழுத்திட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி அப்பதிவில் கூறியுள்ளார்.
அதன் முடிவில், பஞ்சாபி மொழி பாடல் ஒன்று ஒலிக்கிறது. "பஞ்சாபுக்கு மகிழ்ச்சி திரும்பும்' என்று உறுதியளிக்கும் வாசகம் அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங் 500 கி.மீ. தூர விவசாயி பேருந்து யாத்திரையை மேற்கொண்டார்.
7 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரையின்போது விவசாயிகளின் நலன்கள் காக்கப்படும் என்றும் அவர்களின் துன்பங்கள் களையப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com