பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த இந்தியா முயற்சி: தூதர் குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பிரச்னையில் தங்களைத் தனிமைப்படுத்த இந்தியா முயலுவதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் குற்றம்சாட்டினார்.

பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பிரச்னையில் தங்களைத் தனிமைப்படுத்த இந்தியா முயலுவதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர், தில்லியில் உள்ள பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆய்வு அமைப்பில் (ஐபிசிஎஸ்) திங்கள்கிழமை பேசியதாவது:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஜம்மு-காஷ்மீர் பிரச்னைதான் அடிப்படைக் காரணமாகும். பாகிஸ்தானில் 20 கோடி மக்கள் வசிக்கின்றனர். எங்களது வெளிநாட்டுக் கொள்கையின் இலக்கை எட்டுவதற்கு தீவிர தேசியவாதத்தைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம்.
பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பிரச்னையில் எங்களைத் தனிமைப்படுத்த இந்தியா முயலுகிறது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ச்சியாக தூதரக உறவை வைத்துக் கொள்வதன் மூலமாகவே, இரு நாடுகளின் பிரச்னைகளையும் களைய முடியும். இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக, பயனுள்ள வகையில் ஒத்துழைப்புக் கோட்பாட்டை உருவாக்க வேண்டும். காஷ்மீர் பிரச்னையால், இந்தியாவும் பாகிஸ்தானும் விரோதிகளாகி விட்டன. அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்துவதன் மூலமாகவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார் அப்துல் பாஸித். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலை அடுத்து, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com