காவிரி நடுவர் மன்ற விவகாரம்: மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

காவிரி நடுவர் மன்ற விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு எழுத்துப் பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற விவகாரம்: மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்


புது தில்லி: காவிரி நடுவர் மன்ற விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு எழுத்துப் பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் 17 பக்கம் கொண்ட எழுத்துப் பூர்வ வாதத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா? மேல்முறையீட்டு மனுக்களை  விசாரிக்க அதிகாரம் பெற்றதா உச்ச நீதிமன்றம்? என்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்று தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.

மத்திய அரசு வாதத்தில், நடுவர் மன்ற தீர்ப்பே இறுதியானது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களும் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com