'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் மேற்கு - தென்மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்


விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் மேற்கு - தென்மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு - மத்திய வங்கக் கடலில் உருவான கியான்ட் புயல் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு - தென்கிழக்காக 620 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்காக 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பல், கியான்ட் புயல் கடந்த 6 மணி நேரத்தில் தனது பயண திசையை மாற்றி மேற்கு - தென்மேற்காக  மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு மத்தியப் பகுதியை கடந்து வங்கக் கடலின் மேற்கு - தென்மேற்குப் பகுதியை அடுத்த 72 மணி நேரத்தில் அடையும்.

கியான்ட் புயல் சனிக்கிழமையன்று பிரகாசம் மாவட்டத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புயல் மேற்கு வங்கம் - ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த புயல் காரணமாக வியாழக்கிழமை முதல் கடற்பரப்பில் காற்றின் வேகம் தீவிரமாக இருக்கும் என்றும், ஆந்திர மாநிலத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com