தில்லி விமான நிலையத்தில் வைரங்கள் பறிமுதல்: 2 பேர் கைது

உரிய ஆவணங்களின்றி வைரக்கற்கள் கொண்டு வந்த 2 பேர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
தில்லி விமான நிலையத்தில் வைரங்கள் பறிமுதல்: 2 பேர் கைது

புதுதில்லி: உரிய ஆவணங்களின்றி வைரக்கற்கள் கொண்டு வந்த 2 பேர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவர் வந்துள்ளனர். அவர்களை வருவாய் புலனாய்வு, சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் உடமைகளை சோதனையிட்டபோது, அவர்களது பவர் பேங்கில் வைரங்கள் மறைத்து வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 493 வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வைரரைக்கற்கள் கொண்டு வந்த இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், காங்கோ நாட்டில் இருந்து, சூரத்தில் உள்ள வியாபாரி ஒருவருக்கு கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள், ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு தொழில்முறை கடத்தல்காரர் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த வைரக்கற்கள் அனைத்தும் கிம்பர்லி சான்றிதழ் பெறவில்லை என்றும், இது எந்த வகையான வைரம் என்று அடையாளம் காணப்படவில்லை என்று சுங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து துணை கமிஷனர் கரண் தாபர் தலைமையிலான காவல்துறையினர், 493 கற்களின் மதிப்பு குறித்து தெரியவில்லை என்றும், மும்பையில் உள்ள வைர வியாபாரிகள், மதிப்பீட்டாளர் மூலம் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் கைப்பற்றப்பட்ட மிகவும் விலை உயர்ந்த மிகப்பெரிய அளவிலான கடத்தல் வைரங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது. சூரத்திற்கு கொண்டு செல்லப்படும் வைரங்கள், அங்குள்ள ஆய்வகத்தில் பட்டை தீட்டப்பட்டு சாதாரண வைரம் போல் மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வைரங்கள் இறக்குமதி செய்வதற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தயாரித்து வழங்கப்படும் கிம்பர்லி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இந்திய பாஸ்போர்ட் உடன் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், ரூ.50 ஆயிரம் வரை பொருட்கள் கொண்டு செல்லலாம். ஆனால் அதற்கு அதிகமான மதிப்பில் கொண்டு செல்லும் போது, 36.05 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பது சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com