அன்னியச் செலாவணி: வர்த்தக அமைச்சகத்துடன் ஜிஎஸ்டிஎன் ஒப்பந்தம்

அன்னியச் செலாவணி மாற்றம் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்காக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துடன் ஜிஎஸ்டிஎன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அன்னியச் செலாவணி மாற்றம் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்காக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துடன் ஜிஎஸ்டிஎன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற தனியார் துறை நிறுவனமே ஜிஎஸ்டிஎன் ஆகும். இந்நிலையில், ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவரப்படும் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் இருக்கும் அன்னியச் செலாவணி மாற்ற விவரங்களை சம்பந்தப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஜிஎஸ்டிஎன் அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com