அழைப்பு துண்டிப்பு விவகாரம்: தொலைதொடர்புத் துறை அமைச்சர்நவம்பர் 1-இல் ஆலோசனை

அழைப்பு துண்டிப்பு விவகாரம் குறித்தும், எதிர்காலத்தில் அந்தப் பிரச்னை உருவாகாமல் தீர்வு காண்பதற்காகவும்,

அழைப்பு துண்டிப்பு விவகாரம் குறித்தும், எதிர்காலத்தில் அந்தப் பிரச்னை உருவாகாமல் தீர்வு காண்பதற்காகவும், செல்லிடப்பேசி நிறுவன உயரதிகாரிகளுடன் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வரும் செவ்வாய்க்கிழமை (நவ.1) ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுகுறித்து மத்திய தொலைதொடர்புத் துறை செயலர் ஜே.எஸ்.தீபக், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அழைப்பு துண்டிப்பு விவகாரம் தொடர்பாக, செல்லிடப்பேசி நிறுவனங்களில் தலைமை செயற்பாட்டு அதிகாரிகளுடன் அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்போதைய கூட்டத்தில், தற்போதைய நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் இந்தப் பிரச்னை எழாமல் தடுக்கும் வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
டிராய் நடத்திய ஆய்வின்படி, அழைப்பு துண்டிப்பு விவகாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.
முன்னதாக, அழைப்பு துண்டிப்பு பிரச்னையைத் தடுக்கும் விதமாக, 100 நாள் செயல்திட்டத்தை செல்லிடப்பேசி நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ளன. அதன்படி, 60,000 செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க அந்நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஜே.எஸ்.தீபக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com