"நக்ஸலைட் என்கவுன்ட்டர் பற்றி நீதி விசாரணை தேவை'

ஆந்திர-ஒடிஸா எல்லையில் இரு மாநில போலீஸாரின் கூட்டுப் டையால் 28 நக்ஸலைட் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது

ஆந்திர-ஒடிஸா எல்லையில் இரு மாநில போலீஸாரின் கூட்டுப் டையால் 28 நக்ஸலைட் தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறியதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நக்ஸல்களுடனான மோதல் என்ற பெயரில் 28 நக்ஸல்களை போலீஸார் அத்துமீறி சுட்டுக் கொன்றதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி கோருகிறது. அதேவேளையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்து மாவோயிஸ்ட் அமைப்பினரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தையும் கண்டிக்கிறோம். பலரும் அது போலியான கடிதம் என்றே நம்புகின்றனர். எனினும், அரசியல் தலைவர்களையும், தனிநபர்களையும் குறிவைப்பது கண்டிக்கத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சியினரை ஹிந்துக்களின் விரோதிகள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறுவது சரியல்ல. இடதுசாரிக் கட்சிகள் எந்த மதத்தையும் ஆதரிப்பதும் இல்லை'; எதிர்ப்பதும் இல்லை. மதச்சார்பற்ற தன்மையை அவை வலியுறுத்துகின்றன.
கேரளத்தில் தங்கள் தொண்டர்கள் மீது இடதுசாரிக் கட்சிகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கியதாக ஆர்எஸ்எஸ் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று சுதாகர் ரெட்டி கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com