இனி வீட்டு வேலை செய்வோருக்கும் உண்டு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்!

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய திட்டப்படி இனி வீட்டு வேலை செய்வோருக்கும்,  இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இனி வீட்டு வேலை செய்வோருக்கும் உண்டு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்!

ஐதராபாத்: மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய திட்டப்படி இனி வீட்டு வேலை செய்வோருக்கும்  இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு அனைவருக்கும் காப்பீடு என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக இந்த திட்டம் டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் தொடங்கப்படும். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு தொழிலாளர்களின் பங்களிப்புடன், தொழில் அதிபர்களின் பங்களிப்பும் இருக்கும். இந்த திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பு ஊழியர்கள் (காவலாளிகள்) ஆகியோரும் சேர்க்கப்படுவார்கள்.

இது தொடர்பான பயிற்சி வகுப்புகள் விரைவில் நடை பெறும். அதன் பிறகு இறுதி முடிவு செய்யப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் 1கோடி தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com