கர்நாடகத்தையும் வாழ விடுமாறு முறையிடுவோம்: அமைச்சர் எம்.பி.பாட்டீல்

கர்நாடகத்தையும் வாழ விடுமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

கர்நாடகத்தையும் வாழ விடுமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: உச்ச நீதிமன்றம் கூறியிருந்த "வாழு, வாழவிடு' என்ற கொள்கைப்படி கர்நாடகத்தை வாழ விடுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் செப்.27-ஆம் தேதி முறையிடுவோம். "வாழு, வாழவிடு' கொள்கையின்படிதான் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். செப்.5, 12 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படியே தமிழகத்துக்கு காவிரி நதி நீரைத் திறந்துவிட்டிருந்தோம். தற்போது கர்நாடக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவுசெய்வது அவசியமாகும். நாங்களும் வாழ வேண்டும். அதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது. நாங்கள் குடிக்க தண்ணீர் கேட்கிறோம் அவர்கள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுகிறார்கள். இதனால் இப் பிரச்னை,
சட்டப்பேரவையின் தீர்மானத்தின்படி காவிரி நதிப் படுகை மக்களுக்கு குடிநீர் வழங்க முக்கியத்துவம் தரப்படும்.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செப்.27-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்துக்கும் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை. 7 நாள்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்குமாறு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம்.
மத்திய நீர்வளத் துறைக்கு சட்டப்பேரவையின் தீர்மான நகலை அனுப்புவோம். இந்த நகல்கள் குடியரசுத் தலைவர், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com