இந்தியா மீது நீண்ட கால போர் தொடுத்திருக்கிறது பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதன் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் நீண்டகால போரைத் தொடுத்திருக்கிறது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
இந்தியா மீது நீண்ட கால போர் தொடுத்திருக்கிறது பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதன் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் நீண்டகால போரைத் தொடுத்திருக்கிறது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தேசியக் கவுன்சில் கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றி அமித் ஷா பேசியதாவது:
உரி பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியாக செயல்பட்ட சதிகாரர்களுக்கு எதிராக மக்கள் கோபத்தில் இருப்பதை பாஜக உணர்கிறது. காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடந்த 8 மாதங்களாக நடைபெற இருந்த 17 ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே உரி பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இதன்மூலம் இந்தியா மீது நீண்டகால போரை பாகிஸ்தான் தொடுத்திருக்கிறது. எனினும், போரின் முடிவில் இந்தியாவே வெற்றி பெறும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை பாஜகவும், மத்திய அரசும் ஆரம்பத்திலிருந்தே கடைபிடித்து வருகிறது. உரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். கடந்த 8 மாதங்களில் 117 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிடுவதற்கான யுக்தியை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் அமித் ஷா.
மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அமித் ஷா மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிவினைவாதிகள் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.


அமித் ஷா காண்பது பகல் கனவு: காங்கிரஸ்


கேரள மாநிலம், கோழிக்கோடில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "கேரளத்தில் அடுத்து பாஜக ஆட்சி அமையும்' என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அந்த மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரனிடம், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "அது அமித் ஷா கண்ட பகல் கனவு' என்றார். கேரள காங்கிரஸ் அரசியல் விவகாரங்கள் குழுக் கூட்டம், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதுகுறித்து சுதீரன் கூறுகையில், "கூட்டத்தில் உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. பதான்கோட் தாக்குதலில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றிருந்தால், உரி தாக்குதல் நடந்திருக்காது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com