பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்குவதுபோல மோடியும் சுயபரிசோதனை செய்ய வேண்டும்

பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்குவதுபோல, பிரதமர் நரேந்திர மோடியும் தனது அரசின் செயல்பாட்டை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்குவதுபோல மோடியும் சுயபரிசோதனை செய்ய வேண்டும்

பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்குவதுபோல, பிரதமர் நரேந்திர மோடியும் தனது அரசின் செயல்பாட்டை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் அவர் இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தான் மக்களின் நலனுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி, அந்நாட்டு பிரதமருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்குவது நன்றாக உள்ளது. இதேபோல், இந்தியாவில் தனது அரசின் பணிகளையும் மோடி சுயபரிசோதனை செய்ய வேண்டும். உரியில் பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டு மக்களிடையே ஒருவித கோபம் நிலவுகிறது.
இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்கு பிரதமர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உரியில் நமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதையடுத்து, மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நீண்டகால திட்டத்தை வகுப்பதை விட்டுவிட்டு, பாகிஸ்தானுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை தொடர்பாக அறிவுரை அளித்து, நாட்டை மோடியின் அரசு தவறாக வழிநடத்துகிறது. மேலும், நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலும் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், நாட்டு மக்களை உணர்ச்சிகரமாக மிரட்டும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கும் அவரது செயல், அரசியல் சதியாகும். இதை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச, பஞ்சாப் மாநிலங்களின் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் டெங்கு, சிக்கன்குனியா ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில், மாநிலத்தை ஆளும் சமாஜவாதி அரசு தோல்வியடைந்து விட்டது.
உத்தரப் பிரதேச மக்கள் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், சமாஜவாதி கட்சி குடும்ப பிரச்னையில் தீவிரம் காட்டி வருகிறது என்றார் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com