பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பங்கீடு: மோடி தலைமையில் அவசர  ஆலோசனை!

பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்வவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பங்கீடு: மோடி தலைமையில் அவசர  ஆலோசனை!

பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்வவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் பகு தியில் அமைந்துள்ள 'உரி' ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உறவில் பதட்டம் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த ஷரத்துகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கின. ஒப்பத்தம் ரத்து ஆகலாம் என்றும் தகவல்கள் வர த்  தொடங்கின.

இந்த சூழ்நிலையில்  சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்வதற்காக உயர் மட்டக் குழு கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் ஜெய்ஷ்ங்கர், மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர் மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com