விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மீண்டும் வலியுறுத்தல்

மகாராஷ்டிரத்தைப் பிரித்து விதர்பா பிராந்தியத்தை தனி மாநிலமாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சரும்...
விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மீண்டும் வலியுறுத்தல்

மகாராஷ்டிரத்தைப் பிரித்து விதர்பா பிராந்தியத்தை தனி மாநிலமாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவருமான ராமதாஸ் அதாவலே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தெலங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது நாம் அதற்கு ஆதரவு தெரிவித்தோம். அதேபோல், விதர்பாவையும் தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும். மக்களும், இந்தியக் குடியரசுக் கட்சியினரும் விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விதர்பா பிராந்தியத்தில் தொழில்துறை, நீர்ப்பாசனம், மின் துறை என எந்தவொரு துறையிலும் வளர்ச்சி ஏற்படவில்லை. ஹிந்தி பேசும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தெலுங்கு பேசும் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்படி இருக்கையில் மகாராஷ்டிரத்தைப் பிரித்து விதர்பாவை ஏன் தனி மாநிலமாக்கக் கூடாது?
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர்களே என்று ராமதாஸ் அதாவலே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com