சுப்ரதா ராயின் பரோல் அக்.24-ம் தேதி வரை நீட்டிப்பு

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயின் பரோலை அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.200 கோடி செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரதா ராயின் பரோல் அக்.24-ம் தேதி வரை நீட்டிப்பு

புது தில்லி: சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயின் பரோலை அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரூ.200 கோடி வைப்புத் தொகையாக செலுத்தவும். தொகை எவ்வாறு செலுத்தப்படும் என்ற விளக்கத்தை கோரவும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

சஹாரா குழுமம் முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் கடந்த 2014-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனது தாயார் கடந்த மே மாதம் இறந்ததை அடுத்து, சுப்ரதா ராய் பரோலில் வெளியே வந்தார். பின்னர், முதலீட்டாளர்களுக்கு திருப்பிச் செலுத்துதற்கான பணத்தை ஏற்பாடு செய்வதற்காக, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சுப்ரதா ராயின் பரோல் அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டித்தும், ரூ.200 கோடி வைப்புத் தொகையாக செலுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com