வாகா எல்லையில் கொடி மரியாதையை ரத்து செய்தது இந்தியா

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் வாகா பகுதியில் வழக்கமாக நடைபெறும் கொடி மரியாதையை இந்தியா ரத்து செய்துள்ளது.
வாகா எல்லையில் கொடி மரியாதையை ரத்து செய்தது இந்தியா


ஸ்ரீநகர்: இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் வாகா பகுதியில் வழக்கமாக நடைபெறும் கொடி மரியாதையை இந்தியா ரத்து செய்துள்ளது.

உரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய எல்லையை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்திது.

உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதன் ஆரம்பமே இந்த அதிரடி தாக்குதல் என்றும், நேற்று இரவு தொடங்கிய தாக்குதல், இன்று அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றதாகவும் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ஜெனரல் ரன்பீர் சிங் கூறினார்.

இந்த நிலையில், வாகா எல்லைப் பகுதியில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்தினர் செலுத்தும் கொடி மரியாதை நிகழ்ச்சியை இந்தியா இன்று ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com